Friday, 5 July 2013

ஏய் சமூகமே! செத்துத் தொலை!!!

சாவு!
இதில்தான் எத்தனை எத்தனை வகைகள்?
கொலை, தற்கொலை, திடீர் சாவு, நோய்வாய்பட்டு மரணம், விபத்து மரணம், பெண் சிசுக் கொலை, கருக்கலைப்பு கொலை, கருணைக் கொலை இன்னும் பல இப்படி...

சில நாட்களுக்கு முன் என் நண்பனின் தந்தை தன்னுடைய இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தும் போது தவறுதலாக முந்திச் செல்ல முயன்ற ஒரு நான்கு சக்கர வாகனம் "எருமை"யாக மாறி தன் அன்பு மனைவியின் கண்முன் அவர் உயிரை கொய்ததே!
இது போல் தினம் தினம் எத்தனை விபத்து மரணங்கள் ஏற்படுகின்றன.  இந்த மரணங்கள் "சமூகத்திற்கு" வெறும் ஒரு செய்தி.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அது வாழ்க்கை முழுவதும் வலி.  இத்தனை விபத்துக்கள் நடந்தும் இந்த சமூகம் திருந்தியதா?  ஓட்டுனர் ஒரு ஐந்து விநாடிகள் பொறுமை கடைபிடித்திருந்தால் ஒரு உயிர் நம்மை விட்டு போயிருக்காதே.  அந்த குடும்பத்தின் சந்தொஷமும் குலைக்ந்திருக்காதே!
திருந்தாத சமூகமே!  நீ செத்துத் தொலைந்தால்தான் என்ன?

இரண்டு நாட்களுக்கு முன் பொறியியல் படித்த நல்ல உத்தியோகத்தில் இருந்த நமது இளைஞன் சென்னையில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் மூண்றாம் தளத்திலிருந்து குதித்து தன் இன்னுயிரை நீக்கிக்கொண்டான்.  நல்ல படிப்பையும் கை நிறைய சம்பாத்தியத்தையும் கொடுத்த இந்த சமூகம் அவனை வாழவிடவில்லையே ஏன்?
தன்னை பெற்ற தாய் தந்தை தன் மறைவின் துயரத்தை தாங்குவார்களா, அவர்களின் கனவுகளை சிதைத்துவிட்டோமே நாம் என்று கொஞ்சமும் சிந்திக்கச் சொல்லாமல் அவனை தற்கொலை செய்துகொள்ள தூண்டிய இந்த சமூகமே, 
நீ இருந்து என்ன பயன்?  செத்துதான் போயேன்!

இதோ நேற்று!
தனக்கு பிடித்தவளோடு வாழ நினைத்தவன் இன்று செத்துக்கிடக்கிறான்.  ஐயோ என்ன கொடுமை இது!!
இந்த சமூகத்தில் தனக்கு பிடித்தவளோடு/பிடித்தவனோடு கூட  வாழ முடியவில்லையென்றால், பின் இந்த சமூகம் இருந்தால்தான் என்ன அல்ல செத்து மடிந்தால்தான் என்ன?

ஓ இறைவா!
வெள்ளத்தில் பாதித்த மக்களை காக்கச் சென்ற எம்மதுரை வீரனை, உனக்கு என்ன அவசரமோ அல்லது அவசியமோ, அழைத்துக்கொண்டாய்!  நாமும் துக்கம் தொண்டையை அடைக்க, வாய்ப்பேசாமல் கொடுத்துவிட்டோம்.  நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்.  எங்கள் பிரார்த்தனைகளை ஏற்பாயாக!

"இந்த சமூகத்தை கொன்றுவிடுவாயாக"

நீ எப்போதும் போல சாந்தமாகவே இருப்பாயேயானால், இதோ என் சாபம்...

ஏய் மூடச் சமூகமே
பாடம் கற்க மறுக்கும் சமூகமே
நீ செத்துத் தொலைவாயாக!!!

7 comments:

  1. வேதனையான பதிவு.

    ReplyDelete
  2. மிகவும் வருந்த வைக்கிறது...

    ReplyDelete
  3. சமூகம் என்பது தனியானது அல்ல.. நம்மைப் போன்றவர்களின் தொகுப்புதான்....நம்மால் முடிந்ததைச் செய்வோம்...உங்கள் உணர்வுகள் புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  4. அன்பின் அஜீஸ் - ஆதங்கம் புரிகிறது - சமூகம் என்பது நம்மைப் போன்ற மனிதர்க்ளின் கூட்டம் தான் - சமூகம் ஒன்றும் செய்ய இயலாது - சமூகத்தின் அங்கமான ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். செயலாற்ற வேண்டும் - நாம் திருந்த வேண்டும் - திருந்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. Ithu samugathin kuttramalla
    azeez

    ReplyDelete