வணக்கம் நண்பர்களே!
இப்பதிவு திரு சாம் ஜார்ஜ் அவர்களுக்கான பதில் பதிவு.
முதலில் இங்கு சுட்டி அந்த பதிவை படித்துவிட்டு இதை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்பதிவை திரு ஜோதிஜி அவர்கள் ப்ளஸ்-ல் பகிர்ந்ததால் நான் படிக்க நேர்ந்தது.
படித்துவிட்டீர்களா?
சரி. இனி அவரின் சில சந்தேகங்களுக்கு எனக்கு தெரிந்தவற்றிலிருந்து தெளிவு ஏற்படுத்த முயற்சிதான் இந்த பதிவு.
இப்பதிவு திரு சாம் ஜார்ஜ் அவர்களுக்கான பதில் பதிவு.
முதலில் இங்கு சுட்டி அந்த பதிவை படித்துவிட்டு இதை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்பதிவை திரு ஜோதிஜி அவர்கள் ப்ளஸ்-ல் பகிர்ந்ததால் நான் படிக்க நேர்ந்தது.
படித்துவிட்டீர்களா?
சரி. இனி அவரின் சில சந்தேகங்களுக்கு எனக்கு தெரிந்தவற்றிலிருந்து தெளிவு ஏற்படுத்த முயற்சிதான் இந்த பதிவு.
திரு தருமி ஐயா அவர்களுக்கு மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
social harmony நிகழ்வில் நடந்தை குறிப்பிடும் போது ஒரு குழுவில் "....இந்து மதத்தைப்பற்றிய ஒரு கருத்து அவர் வாசிக்கும் போது விவாதத்திற்குள்ளானது ...." என்றும் மற்றொரு குழுவில் "....இஸ்லாமியர்கள் பாகிஸ்தானும் இந்தியாவும் கிரிக்கெட் ஆடினால் பாகிஸ்தான் வெல்ல ஆசைப்படுவார்கள்..." என்று சொல்கிறீர்களே, இந்து மதத்தை பற்றிய கருத்தை வெளியிடாமல் "ஒரு கருத்து" என்பதோடு முடித்துக் கொண்டீர்களே அந்த ஒரு கருத்து அச்சில் ஏற்றக்கூட கூசக்கூடியதோ ஐயா?
ஃபத்வா:
ஃபத்வா என்பது மார்க்க அறிஞரால் வழங்கப்படும் தீர்ப்பாகும். தீர்ப்பு என்றவுடன் நன்றாக புரியும் ஒவ்வொரு அறிஞரும் தன் அறிவுக்கு ஏற்ப கொடுப்பது என்று. ஒரு ஃபத்வா வந்தவுடன் உலகமே இருண்டுவிட்ட மாதிரி இருக்கிறது சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமா போன்றவர்களுக்கு. ஐயா நீங்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டீர்கள். அக்பர் தீனே இலாஹி என்ற புதிய மதத்தை இயற்றினார். ஷீர்டி சாய்பாபாவை இன்றும் கடவுளாக ஏற்கும் மக்கள் இருக்கின்றனர். மெய்வழிச்சாலையில் காதர் பாட்சா ராவுத்தரை அறிய சிவகாசிக்காரனை சுட்டி அறிந்துகொண்டீர்களானால் ஃபத்வா என்பது வெறும் பாவ்லா பண்ணவே பயன்படுகிறது என்பதை நன்றாக அறிந்து கொள்வீர்கள். மேலும் ஷாபானு எனும் காவல்துறை ஏட்டின் மகளின் வழக்கையும் அறிந்திருப்பீர்கள். இவையெல்லாம் கூற காரணம் ஃபத்வாவுக்கும் உண்மைக்கும் நம் நாட்டில் சம்பந்தமே இல்லை என்பதே! அவர்களுக்கு தங்களைப்பற்றிய ஒரு விளம்பரம். நம் அரசியல்வாதிகளுக்கு அதுவொரு ஓட்டு வியாபாரம். அவ்வளவே.
இந்த ஃபத்வா எனும் "தன் அறிஞர்" கூறும் தீர்ப்பை பிடித்து தொங்கும் பழக்கம் அனைத்து அரசியல்/மதங்களிலும் உள்ளது. சமீபத்திய உதாரணம், இளவரசன் மற்றும் அவரைச்சார்ந்தவர்களின் மரணங்கள். சில நாட்களுக்கு முன் பால் தாக்ரேயின் மரணத்தை பற்றி கருத்து கூறிய ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம். அது போல ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு சொன்னவுடன் கல்லூரி மாணவிகள் பேருந்தோடு தீயிட்டு கொளுத்தப்பட்டதும், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் தமிழர்களும் திமுகவும் தாக்கப்பட்டதும், இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் சீக்கிய இனத்தையே அழிக்க முயற்சித்ததும் இதுபோல ஃபத்வா எனும் தீர்ப்பு சொல்பவர்களால்தானே ஐயா?
டாவின்சி கோட்-க்கு நடந்ததும் இந்த மாதிரி ஃபத்வாதானே ஐயா?
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஃபத்வாவை சரியென்றோ தவறென்றோ இங்கு வாதாடவில்லை. இந்த ஃபத்வாவை அனைத்து நம்பிக்கையாளர்களும் (அரசியல்/மதம்) கையில் எடுத்துக்கொண்டு நர்த்தனம் ஆடுகின்றனர் என்பதே! அது இஸ்லாமியர்களின் ஏகபோக உரிமைபோல நீங்கள் கூறுவதை மறுப்பதேயாகும்.
பர்க்கா:
பர்க்கா என்பதும் ஏதோ இஸ்லாமியர்களின் ஏகபோக பெண்ணியக்கத்தின் ஆணிவேரையே அசைத்துப்போடும் ஒரு இரும்புக்கவசம் போல சித்தரித்துள்ளீர்கள். மதர் தெரஸா அணிந்து கொண்டதும் இந்த பர்க்காதானே ஐயா? என்ன ஒரு வித்தியாசம் என்றால் மதர் கருப்பு வண்ணத்தில் அணிவதில்லை. அவ்வளவே! அதுமட்டுமல்ல. நம் இந்தியக்கலாச்சாரத்தில் பெண்கள் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் இருப்பதை கண்டதில்லையா? பிறகு ஏன் பர்க்காவை இழுத்து இஸ்லாத்துடன் கட்டுகிறீர்கள்?
வண்ணம்தான் உங்களுக்கு பிரச்சனையென்றால் இந்த மாதிரி பர்க்கா ஓக்கேவா என்று தெரியப்படுத்தவும் ஐயா!
இப்போது உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்:
கேள்வி 1. உங்கள் மதத்திலிருந்து யாரேனும் வெளியே வரமுடியுமா? வந்தால் ஏன் உங்கள் மதமும் நீங்களும் தடை செய்கிறீர்கள்?
நடிகை சுரையா தேவ் ஆனந்த் எனும் நடிகரை திருமணம் செய்தது
நடிகை குஷ்பு சுந்தரை திருமணம் செய்தது
நவாப் ஆஃப் பட்டோடி மன்சூர் அலி கான் ஷர்மிளா தாகூரை திருமணம் செய்தது
பிறகு ஆமீர்கான் ஷாருக்கான் ஆகியோரின் திருமணங்கள் மேலும் சல்மான்கான் தன்வீட்டில் கணேஷ் பூஜையை விமரிசையாக கொண்டாடுவது எல்லாம் எதை காட்டுகிறது?
மேலும் திருமதி இந்திரா காந்தி முஸ்லீமாக மதமாறித்தான் ஃபேரோஸ் ஜஹாங்கீரை திருமணம் செய்தது பின்னர் தன் மதத்திற்கே மாறியது எல்லாம். மேலும் இப்போது ஆஃப்கானிஸ்தானில் கிறிஸ்துவர்கள் யாரை மதமாற்றுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அங்குள்ள முஸ்லீம்களைத்தானே?
எனவே இஸ்லாத்திலிருந்து யார் வேண்டுமானாலும் வெளியே வர முடியும் அப்படி வெளியே வருபவர்கள் எந்த தடையும் இன்றி வாழ்கின்றனர் என்பதற்கு மேலும் ஒரு சான்று கீழே உள்ள படம் ஐயா.
கேள்வி 2. எந்த ஒரு கேள்வியையும் மதத்தில் எழுப்பக்கூடாதா? ஏன் இந்த பயம்? அல்லாவை காப்பாற்றவா? இஸ்லாமை காப்பாற்றவா?
கண்டிப்பாக கேள்விகள் கேட்கலாம். பதில் பெறலாம். தெளிவடையலாம். பின்னரே மார்க்கம். ஆப்ரகாமுக்கு (இப்ராஹீம் அலை) படைத்தவன் யார் என்று கேள்வி பிறந்ததால்தான் அவர் தெளிவு பெற்றார். ஓரிறைவனை அவர் அறிந்தார்.
சந்தேகம் என்பதற்கும் விதண்டாவாதம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதுதானே ஐயா? எனவே கேள்வியின் நோக்கம் உண்மையெனில் விளக்கம் நிச்சயம் பெறமுடியும்.
பிறகு, அல்லாவை காப்பாற்றவேண்டிய அவசியம் யருக்கும் இல்லை. ஏனெனில் கடவுள் என்ற வார்த்தைக்கு அரபி மொழியில் வார்த்தை அல்லாஹ். அவ்வளவே! அதேபோல இஸ்லாமை காப்பாற்ற வேண்டிய தேவையும் ஏற்படவில்லை என்றே எண்ணுகிறேன். இதெல்லாம் வெரும் பிரம்மை. அவ்வளவே!
கேள்வி 3. உங்கள் தீவிரவாதம் ஏன் உங்கள் மதத்தினர் மீதும் இப்படிப் பாய்கிறது?
எல்லாம் நல்லாதானே போய்க்கொண்டிருந்தது. ஏன் திடீரென்று தீவிரவாதம் என்று மாறியது? இப்போ நம் நிலை எப்படி ஆகிவிட்டது என்றால் எனக்கு தெரிந்தவன் தவறிழைத்தால் அது தவறல்ல என்பது போல. அதனால்தான் இந்த கேள்வியே. தவறு யார் செய்தாலும் அது தவறுதான் என்று இஸ்லாம் கூறுவதையா தவறு என்கிறீர்கள். என்னிடம் இதற்கு பதிலில்லை.
கடைசியாக, பொங்கல் என்பது உழவர் திருவிழா. அது எனக்கு தெரிந்து அனைத்து விவசாயிகளும் கொண்டாடுகின்றனர். நானும் அதில் பங்கெடுத்துள்ளேன். (நான் விவசாயி அல்ல) என்ன ஒன்று சூரிய பகவான் எனும் கான்செப்ட்-ஐ வணங்குவதில்லை. அவ்வளவே. அது தவிர பொங்கல் வைப்பதிலிருந்து மாட்டுப் பொங்கல் வரை, ஏன் ஜல்லிக்கட்டில் பங்கெடுப்பதுவரை எல்லோருமே சேர்ந்துதான் செய்கின்றனர்.
கட்டக்கடசியாக, "தாய் மண்ணே வணக்கம்" என்று தொண்டை தண்ணி காயிற மாதிரி நம்ம ரஹமான் தம்பி கத்தியதற்கு பின்னாலும் இப்படி ஒரு அபாண்டத்தை சொன்னால் என்னிடம் ஏது பதில்!!
social harmony பேசுகின்றோம் என்று கூறி ஒன்றும் அறியாத குழந்தைகளின் மனதில் வெறுப்பு எனும் தீயை மூட்டாதீர்கள் என்று கூறி அனைவரும் இதை பொறுமையாக வாசித்தமைக்காக நன்றிகளையும் வணக்கங்களையும் கூறிக்கொள்கிறேன்.
வலையுலகில் உங்களைப் போன்ற மதம் சார்ந்த கருத்துக்களில் எத்தனை பேர்கள் இந்த அளவுக்கு சகிப்புத்தன்மையை கடைபிடிக்கின்றார்கள்?
ReplyDelete//தவிர பொங்கல் வைப்பதிலிருந்து மாட்டுப் பொங்கல் வரை, ஏன் ஜல்லிக்கட்டில் பங்கெடுப்பதுவரை எல்லோருமே சேர்ந்துதான் செய்கின்றனர்.//
ReplyDeleteஅடடா! முழுப் பூசணிக்காயை பிரியாணியில் மறைப்பதா ..வேண்டாம் ... வேண்டாம்!
இந்தப் பதிவுகள் உங்களுக்கு வேண்டிய (பொங்கல்) பதில்களைத் தரும்:
http://dharumi.blogspot.in/2007/01/197.html
http://dharumi.blogspot.in/2008/01/argument-continues.html
//இப்பதிவை திரு ஜோதிஜி அவர்கள் ப்ளஸ்-ல் பகிர்ந்ததால் நான் படிக்க நேர்ந்தது.//
ReplyDeleteபாருங்கள் .. ஜோதிஜி உங்களுக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்து விட்டார்!
ஜோதிஜி,
ReplyDelete//உங்களைப் போன்ற மதம் சார்ந்த கருத்துக்களில் எத்தனை பேர்கள் இந்த அளவுக்கு சகிப்புத்தன்மையை கடைபிடிக்கின்றார்கள்?//
அடப் பாவமே! ஏழெட்டு மாசக் குழந்தைக்கு பர்க்கா போடுவது கொடுமையன்றி வேறென்ன ...? என்பது என் கருத்து. ஆனால் ஏழெட்டு மாசக் குழந்தைக்கு பர்க்காவா என்று கேட்டதும் எண்பது வயது அன்னை தெரஸா படம் போட்டு எல்லாம் ஒண்ணுதான் என்பவரை எப்படி சகிப்புத் தன்மை உள்ளவர் என்று சொல்கிறீர்களோ! அந்த வயதான இந்துப் பாட்டியும் மதம் சொல்லி முக்காடு போடவில்லை. அதெல்லாம் ஆண்களின் அராஜகம் தான் - பர்க்காவிலும் அதே ஆண்களின் அராஜகம் தான் என்று தான் பர்க்காவை எதிர்ப்போர் சொல்கிறார்கள்.
அதோடு, அஜீஸ் உங்கள் மதத்தில் ஏனிப்படி என்றால் அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். உடனே உங்கள் மதத்தில் இல்லையா என்று பதில் சொல்ல உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எந்த மதத்தில் இருந்தாலும் குறை தான். அதுவல்ல பதில் ஏழெட்டு மாதக் குழந்தைக்கு பர்க்கா என்பது கொடுமை. இதற்குப் பதில் இருந்தால் சொல்லுங்கள். அதுவே நியாயமான விவாதம்.
என் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் என் முழுப்பதிலைச் சொல்கிறேன் என்றேன். வாய்ப்பே கொடுக்க மறுக்கிறீர்களே!