நண்பர்களே, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த ராஜாக்கள் போரிட்டது ஏன், இந்த ராஜாங்கங்கள் அழிந்ததும் வளர்ந்ததும் ஏன்? சேரன் சோழநாட்டை பிடிப்பதும், சோழன் பாண்டியநாட்டை வெல்வதும், பாண்டியன் பல்லவர்களை விரட்டுவதும், பல்லவர்கள் சேர அரசாட்சிகளை அடிமைபடுத்துவதும் ஏன் ஏற்பட்டது? அசோக சக்ரவர்த்தி தென்னகம் வென்றதும், ஹைதராபாத் நிஜாம் ஆற்காடு மற்றும் திண்டுக்கல் வரையிலும் கொடி நாட்டியது... வீர சிவாஜி மதுரையை வென்றது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது மட்டுமா நம் சோழர்கள் இமயமலையில் கொடி நாட்டியதும் கிழக்காசிய நாடுகளான தாய்வான் இந்தோனேசியா போன்ற பல நாடுகளையும் தங்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்தனரே அது ஏன்?
ரொம்ப ஸிம்பில் நண்பர்களே, ஆசை! அதிகார ஆசை! தற்புகழ்ச்சி! அவ்வளவுதான்!
நீ பெரியவனா இல்லை நானா? நீ என் தந்தையை வென்றாயல்லவா, நான் உன் பிள்ளையை வெல்கிறேன் பார்! நீ இவ்வளவு தூரம் ஆள்கிறாயா?, என் அதிகாரத்தை பார் அதுவரை! உன்னிடம் யானைப்படை இருக்கிறதா? என்னிடம் கடற்படையுள்ளது! இப்படி தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகத்தானே இருந்தார்கள்?
இதில் வென்றவர்கள் வீரர்கள், தேசப்பற்றுள்ளவர்கள்.
தோற்றவர்களோ துரோகிகள் மற்றும் கோழைகள்!
பின் சரித்திரம் புரட்டிப்போடப்படும். கோழை வீரனாவான். தேசப்பற்று கொண்டிருந்தவன் துரோகியாவான்.
இதுவே வரலாறானது. ஆனாலும் மக்களோ தத்தமது நாடுகளில் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர். நேற்று வரை பாண்டிய மன்னனால் ஆளப்பட்ட மக்கள் வீர சிவாஜியின் தளபதிகளான நாயக்கர்மார்களின் குடிமக்களானார்கள். பல்லவ நாட்டு மக்கள் நிஜாமால் நேரடியாக ஆளப்பட்டனர். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். அரசுகள் மாறினவே தவிர மக்கள் மாறவில்லை என்பதை இங்கே பதிகிறேன்.
அதேபோல கிபி 1500-க்கு பிறகு மொகலாயப் பேரரசர்கள் இங்கு படையெடுத்து வந்தனர். இவர்களும் மற்ற அரசர்கள் எந்த நோக்கத்தோடு நாடுகளை வென்றனரோ அதே நோக்கத்தோடேதான் வந்தார்கள்... வென்றார்கள். ஆனால் நாம் இன்று படிக்கும் வரலாறோ, மொகலாய மன்னர்கள் பலமுறை போரிட்டு தோற்று நம் செல்வங்களை பறித்து சென்றனர். போரில் தோற்பவன் எப்படி செல்வங்களை கொண்டு செல்வான்... இழந்தல்லவா செல்வான்? வென்றவர் இங்கேயே தங்களின் அரசாட்சியை செய்தனர். அதுபோல இவர்கள் (மொகலாயர்கள்) தங்களுடைய மதத்தை பரப்பினார்கள் என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அக்பரோ தீனே இலாஹி என்ற ஒரு புது மதத்தையே இங்கு தோற்றுவித்தார். அந்த மதம் இஸ்லாமுக்கு முற்றிலும் மாறுபட்டது ஆகும். அதே போல இந்த மொகலாய மன்னர்களால் இஸ்லாம் பரவியதா என்று பார்த்தோமேயானால் இல்லவேயில்லை என்பதுதான் அதாரபூர்வமான உண்மை! அப்படியில்லையென்றால் கிபி 1800-களில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமை படுத்தியபோது ஒரு ஜான்ஸி ராணி லஷ்மிபாயோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, ராணி மங்கம்மாளோ, மங்கல் பாண்டேவோ எப்படி தங்களின் நாட்டுக்காக போரிட்டிருக்க முடியும்?
இப்போ விஷயத்துக்கு வருவோம்! கொஞ்ச நாட்களுக்கு முன் கீழே உள்ள ஒரு செய்தியை இணையத்தில் பார்த்தேன். அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்தபோது .... please note down... மொகலாயர்கள் ஆதிக்கம்தான் அகண்ட பாரதத்தில் இருந்தது. அப்படிப்பட்ட சமயத்திலும் ஆங்கிலேய பார்லிமெண்டில் லார்ட் மெக்கலேவால் பதியப்பட்டது...
"ஒரு பிச்சைகாரனோ, திருடனோ இங்கு இல்லை!
செல்வவளம் மிக்க நாடு இது! நன்நடத்தை கொண்ட திறமையான மக்கள்!
இந்த நாட்டின் முதுகுத்தண்டை முறிக்க வேண்டுமென்றால் இம்மக்களின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை தகர்த்தாலொழிய முடியாது. அதற்காக நாம் செய்யவேண்டியது அவர்களின் பழங்கால பாடத்திட்டத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் ஒழிக்கவேண்டும்!"
1835 ஃபிப்ரவரி இரண்டாம் தேதியிட்ட லார்ட் மெக்கலே-வின் அறிக்கைபடி பார்த்தால் மொகலாயர்கள் பல நூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட பின்னும் மக்கள் சுயசிந்தனையுடன் ஆன்மீகவாதியாகவும் தங்களின் கலாச்சாரத்தை பேணி காப்பவர்களாகவுமே வாழ்ந்துள்ளனர் மற்றும் வாழ வலியுறத்தப்பட்டுள்ளனர் என்பதை நாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிந்துகொள்ள முடியும்.
உண்மை இப்படி இருக்கும்போது நாம் இன்று மதத்தைக்கொண்டு ஏன் முறண்படுகிறோம். இன்றும் நம் கலாச்சாரத்தில் மாற்று மதத்தினரை "மாமன்/மச்சான்/மாப்பிள்ளை/அண்ணே/தம்பி என்று முறைகொண்டுதானே அழைத்துக்கொண்டிருக்கிறோம்! பின் நமக்குள் வன்மம் ஏன்? பிரிவினை ஏன்?
மீண்டும் ஒருமுறை உறக்க கூறுகிறேன்...
இஸ்லாம் வளர்ந்தது வாளால் அல்ல...
நற்செயல்களால்/நன்னடத்தையால் மட்டுமே!
I AM A MUSLIM not because of CHANCE but of CHOICE!
No comments:
Post a Comment