ஒரு வண்டிய ஓட்டணும் என்றால் முதலில் ஸ்டார்ட் பண்ணனும்
பிறகு ஃபர்ஸ்ட் கீர்... செகண்ட் கீர்... தெர்ட் கீர்-நு போய் பின்னர் டாப் கீர் போட்டா வண்டியும் நீண்ட நாட்களுக்கு வரும்
பெட்ரோல் மைலேஜும் நல்லா கொடுக்கும்
அதவிட்டுட்டு, வண்டிய ஸ்டார்ட் பண்ணவுடன் டாப் கீர் போட்டா என்னவாகும்?
ஸோ, எந்த வேலையையும் ஸ்டெப் பை ஸ்டெப்-ஆ செஞ்சாத்தான் நாம நெனச்சத சாதிக்க முடியும்.
நல்லபடியா வண்டிய ஸ்டார்ட் பண்ணீங்க (எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்தீர்கள்)
பிறகு ஃபர்ஸ்ட் கீர் போட கத்துக்கொடுத்திருந்தீங்கன்னா அது சரி (வங்கியின் மூலம் வரவு செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி, பழக்கப்படுத்தி இருக்கணும்)
பிறகு ஸெகெண்ட் கீர் போடணும் (காஷ்-லெஸ் பரிவர்த்தனையை அறிவித்து அதை நடைமுறைபடுத்தாதவர் மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்)
பிறகு தேர்ட் கீர் (இதை பழக்கப்படுத்திக்கொள்ள சிலபல சலுகைகளை அறிவித்திருக்கணும்...உம்., நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து, சம்பளம் வங்கி மூலம் பட்டுவாடா செய்பவர்களுக்கு, அவர்கள் வாங்கும் கடன் தொகைக்கு வட்டியில் கால் சதவீதம் அல்லது அரை சதவீதம் சிறப்பு கழிவு, நூறு சதவிகிதம் வங்கியின் மூலம் பறிமாற்றம் செய்யும் வியாபாரிகளுக்கு, தக்க அங்கிகாரம்... இப்படி ஏதாவது ஒருவழியில் அனைவரையும் வங்கியின்பால் ஈர்த்திருக்கவேண்டும்)
இப்படி செய்யும்போது ஏதாவது தடைகளை சந்தித்திருந்தால், ஒரு பிரேக் அடிச்சு மீண்டும் தேவைக்கேற்ப ஸெகெண்ட் கீரோ அல்லது ஃபர்ஸ்ட் கீரோ போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து
அதன்பிறகு ஃபோர்த் கீரோ அல்லது டாப் கீரோ போட்டிருந்தால் (ரூபாய் நோட்டுக்கள் மதிப்பை இழக்கும் என்ற அறிவிப்பு) வண்டி ஸ்மூத்தாக பயணித்திருக்கும்.
அதையெல்லாம் செய்யாமல், எங்கிட்டே நல்ல ரோட் இருக்கு (தனிப்பெரும்பான்மை), நல்ல வண்டி இருக்கு (என் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காத அடிமைகள்), ஆட்டோமொபைல் இஞ்சினீர் "அப்படியெல்லாம் ஓட்டக்கூடாது" என்று சொன்னால் அவரை மாற்றிவிட்டு (ரகுராம் ராஜன்), நான் எதற்கு ஸ்டெப் பை ஸ்டெப் போகணும் என்று ஒரே தாவில் டாப் கீர் போட்டால் என்னவாகும் என்பதை நீங்களே இப்போது புரிந்துகொண்டு இருப்பீர்கள்.
இன்னுமோர் உதாரணம் வேண்டுமென்றால், இதோ!
மார்பக புற்று நோயை உடனடியாக கட்டுப்படுத்த ஒரு அறிய ஆணை!
இன்று இரவு முதல் வயதுக்கு வந்த அனைத்து பெண்களின் மார்புகளையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுதல். நல்ல ஐடியாதானே!? (யாரும் என்னை அடிக்க வராதீங்க!!!)
அப்படியே நீங்கள் எதிர்த்தால்... உதாரணத்திற்கு
பிறக்கும் குழந்தைக்கு பாலூட்டவேண்டுமே என்று யாராவது கேட்டால்... சொன்னவன் வன்புணர்ச்சி செய்பவன் என்று கூறி அவனை கெவலப்படுத்திவிடலாம் (தேசத்துரோகி/தீவிரவாதி)
அல்லது புட்டி பால் கொடுக்கலாம் என்று கூறி, அதனால் புட்டிகள் கூடதலாக விற்கும், பால் அதிகமாக விற்கும். எனவே உற்பத்தியும் வியாபாரமும் கூடும்... எனவே பண பரிவர்த்தனை அதிகமாவதால் அனைவருக்கும் இலாபமே என்று ஒரு சாராரை வைத்துக்கொண்டு கதைவிடலாம்
அல்லது மிகச்சிறப்பாக புதுவடிவில்
"தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு..."
அப்படீன்னு புதுசா ஒரு ரீல் காண்பித்து
"நாமே இருவர்... நமக்கெதுக்கு மற்றொருவர்?" என்று சொல்லிவிட்டால் முடிந்தது...
முடிஞ்சே போச்சுதே... மார்பக புற்று நோய்!
என்ன நான் சொல்றது சரித்தானே?
125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய திருநாட்டில் வருமான வரி செலுத்துவோர் ஒரேவொரு சதவிகிதம்தான். அதிலும் பெருவாரியாக மாத சம்பளம் பெரும் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் பெருநிருவன ஊழியர்களே! மற்றவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சாக்கு காட்டி தப்பித்துவிடுகின்றனரே! முதலில் இதையல்லவா தடுத்திருக்கணும்?
வருமானவரி கட்டுவதை ஊக்கத்தவறிவிட்டோமே நாம்!
சரியாக வரி கட்டுபவனை நாம் ஏமாளியாகவே காட்டிவருகின்றோமே!
பிறகு கருப்பு பணம் எப்படி காணாமல் போகும்? அதிகரிக்கத்தானே செய்யும்!
சரி..., கருப்பு பணத்தை ஒழிக்கவாவது ஏதாவது உருப்படியா செஞ்சோமா?
அதை வளர்க்கிற மாதிரிதானே அனைத்து திட்டங்களையும் செய்துகொண்டு வந்தோம். உதாரணத்திற்கு...
தனியார் கல்வி நிலையங்கள்
தனியார் மருத்துவமனைகள்
தனியார் சாலைகள்
ஒரு தனிமனிதன், உண்மையான இந்தியன், இலஞ்சம் கொடுக்காமலோ, அதிக கட்டணம் செலுத்தாமாலோ, தான் நினைத்ததை சட்டத்துக்கு உட்பட்டு செய்ய முடியுமா நம் தேசத்தில்? முதலில் செய்யவேண்டியது இதைத்தானே?
தலையை விட்டுவிட்டு வால் பிடிப்பது இதுதானோ?
இதை நான் சொன்னா...
நான் ஒரு தேசத்துரோகி
நான் ஒரு தீவிரவாதி
நான் ஒரு கொள்ளைகாரன்
நான் ஒரு ஏமாற்றுப்பேர்வழி
இரண்டு நாள் பொருத்துக்கொள்ள சொன்னவர் இப்போது ஐம்பது நாட்கள் தவணை கேட்கிறார். மூன்று வாரங்கள் ஆனபின்னரும் இன்னும் ஐநூறு ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்தபாடில்லை. இரண்டாயிரம் ரூபாய் தாளை மாற்ற முடியவில்லை! இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் கூறுவதை கேட்டால் பணத்தாள்கள் புழக்கத்தில் வர குறைந்தது ஆறேழு மாதங்கள் புடிக்கும் என்று தோன்றுகிறது.
உணவு... உடை... உறைவிடம்
இவைதான் ஒரு மனிதனுக்கு அவசியமானது என்று இத்தனை நாட்கள் எண்ணியிருந்தோம். இனி இவையனைத்தையும்விட மிக முக்கியமானது...
CREDIT/DEBIT CARDS
NET BANKING/eVALLET
SWIPING MACHINE
என்பதை உணர்ந்துகொண்டோம்.
ஜெய்ஹிந்த்!
இப்படியெல்லாம் மக்களை யோசிக்கிற மாதிரி பதிவுகள் எழுதி பதிவிட்டால் உங்களை தேச துரோகி என்றுதான் அழைக்க வேண்டும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAzzuzudeen boi,
ReplyDeleteExcellent thinking,good analysis.Keep it up.Also analyse other international issues also.
நண்ப அஜீஸ்,
ReplyDeletestep by step -
படிப்படியாக என்பதெல்லாம்
நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு...
அசாதாரண மனிதர்களுக்கு, தெய்வப்பிறவிகளுக்கு
இதெல்லாம் தேவையே இல்லை.
அவர்களால் எதையும் செய்ய முடியும்...!
அவர்கள் எதைச்செய்தாலும்,
வியந்து பாராட்ட ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.
நாளை தலை குப்புற விழுந்தாலும்,
அதற்கும் ஒரு காரணத்தை அந்த கூட்டமே
கண்டு பிடிக்கும்...
அவர் கவலையே படாமல் அடுத்த அதிரடிக்கு
போய்க்கொண்டே இருக்கலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
-------------------------------------------------------------------
மேற்கண்ட பின்னூட்டத்தை உங்கள் பதிவில் போட
முயற்சித்தேன்,.. முடியவில்லை. ஏதோ டெக்னிகல் கோளாறு.
நீங்களே முடிந்தால், இதை அங்கேயும் பதிந்து விடுங்களேன்.
இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
ReplyDeleteஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி