Saturday, 25 February 2017

விஜயகாந்த் துப்புனது சரிதான்


இன்றைய பத்திரிக்கைகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வந்தது, தீபா பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய அப்போலோ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் கைது என்பது.

கைதுக்கான காரணமாக பத்திரிக்கைகளில் வந்த தகவல் என்னவென்றால், சீதா என்கின்ற அப்பெண்மணி அப்போலோவில் வேலையே பார்க்கவில்லை மேலும் அவர் மருத்துவரே கிடையாது.  எனவே அப்போலோ மருத்துவமனையின் புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டனர்.

இப்படியே போனால் 24 மணி நேர தொலைகாட்சி செய்தி சானல்களையும் மற்றும் பத்திரிக்கைகளையும் நாம் நிச்சயம் காரி துப்பத்தான் தோணுகிறது.  ஏனெனில் இன்றைய ஊடகங்களுக்கு 24 மணி நேரமும் "ப்ரேக்கிங் நியூஸ்" தேவைப்படுகிறது.  அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதெல்லாம் யாருக்கும் கவலை கிடையாது.

2 comments: