Friday, 22 November 2013

ஏடீஎம் - கொள்ளை - கொலை முயற்சி

இரண்டு நிமிடங்களுக்குள் என்ன நடக்கிறது என்று அறிவுக்கு தெரிவதற்குள் எல்லாமே நடந்துவிட்டது.  ஒரு வங்கி அதிகாரி ஏடீஎம்-லிருந்து பணம் எடுக்கும்போது பின்னாலேயே வந்த ஒரு அயோக்கியன் அவரை தாக்கிவிட்டு சர்வசாதாரணமாக ரத்தத்தை துடைத்துவிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி மீண்டும் ஷட்டரை திறந்து வெளியேறி பின் மறுபடியும் வெளியிலிருந்து ஷட்டரை சாத்திவிட்டு செல்கிறான்.  இவையனைத்தும் அங்கு இருக்கும் காமெராவில் பதிவாகிறது.  ஆனாலும் அந்த பெண் அதிகாரியை காப்பாற்ற யாராலும் முடியவில்லை.

சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு ரத்தம் ஏடீஎம் அறைக்கு வெளியில் கசியும் போது பொதுமக்கள் சிலர் பதறி கதவை திறந்து பார்த்தால் ரத்த வெள்ளத்தில் ஒருவர்.  பின்னர் அவரை பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்து இப்போது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாலும் தலையில் கத்தி காயத்தாலும் உடலின் ஒரு பகுதி செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். ஆனாலும் உயிருக்கு ஆபத்து இல்லையென்கின்றனர்.

இதுபோல சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது நல்ல ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

பெங்களூரு காவல் அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், கண்டிப்பாக அனைத்து ஏடீஎம்-களிலும் ஒரு காவலாளியை கண்டிப்பாக வங்கியினர் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது.
இதில் எனக்கு திருப்தி இல்லை.  ஏனெனில் இப்போதும் பல ஏடீஎம்-களில் காவலுக்கு இருப்பவர் அதிக பட்சம் பத்து மீட்டர்கூட ஓட முடியாத வயசானவராக இருப்பதுதான். அவரால் அவசரத்தில் அதிகமாக சத்தம்கூட செய்யமுடியாத ஒரு சொத்தல் நபரையே இந்த மாதிரி இடங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.  அப்படி இருக்கும்போது இது மாதிரி சம்பவங்களை தடுப்பது அவரால் முடியாது.  அல்லது அந்த காவலாளியையே "கரெக்ட்" செய்துவிட்டாலும் போதுமே, இது மாதிரி சம்பவங்கள் நடந்துகொண்டேதானிருக்கும்.

நண்பர் ரஹீம் கஸாலி கூறுவதுபோல அனைத்து ஏடீஎம்-களின் காமெராவும் அதன் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துடன் நேரடியாக இணைப்பது.
நண்பர் சௌந்தர் கூறுவதுபோல கண்டிப்பாக ஒருத்தருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்பது
நண்பர் கொக்கரக்கோ சௌம்யன் கூறுவதுபோல ஏடிஎம் செண்டர்களுக்கு இந்திய அளவிலோ அல்லது உலகத் தரத்திலோ தரச்சான்றிதழும் அனுபவமும் கொண்ட செக்யூரிடி நிறுவனங்களுக்கு மட்டுமே காவலர்களை நியமிக்க அனுமதியளிக்கும் உத்தரவை உடனடியாக ரிசர்வ் வங்கி போட வேண்டும்.
மேலும் ஏடீஎம் அறையில் ஒரு சென்ஸார் வைத்து அதில் சாதாரண டெசிபலுக்கு அதிகமாக ஓசை ஏற்பட்டால் உடனே அபாய சங்கு தானாகவே ஊதுவது.
உதாரணத்துக்கு "ஐயோ காப்பாத்துங்கள்.... காப்பாத்துங்கள்" என்பது நிச்சயமாக அதிக சப்ததத்தில் கூறப்படும்.  அல்லது "ஏய் பணத்தை எடு" என்று அதட்டுவதும் அதிக டெசிபலில்தான் இருக்கும்.
ஏடீஎம்-மின் தரையிலும் ஒரு அதிர்வுக்கான சென்ஸாரை பொருத்துவது.  இதன் மூலம் யாராவாது திடீரென்று தாக்கப்பட்டு கீழே விழும்போது அந்த அதிர்வினால் அபாய ஒலியை ஏற்படுத்துவது.
இப்படி அபாய சங்கு ஊதப்படும்போது ஏடீஎம்-ன் கதவு தானாகவே automatic lock ஆகிவிடுவது போன்ற ஏதாவது ஒன்றை ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

நண்பர்களே வேறு ஏதாவது ஆலோசனைகள்....

சரி, இந்த அயோக்கியர்களுக்கு எந்தவிதமான தண்டனையை வழங்கலாம்...


அல்லது வேறு ஏதாவது இருப்பினும் பகிருங்களேன்!

டிஸ்கி: திருப்பூர் ஜோதிஜி அவர்கள் 

தலைவரே ஆலோசனை என்பதை விட இதற்கு தீர்வு சொல்லுங்க.

ஐஓபி வங்கியில் அருகே உள்ள அவர்களின் ஏடிஎம்  எப்போதும்திறந்தே இருக்கும். இருக்கின்றது.  பல சமயம் நாய் உள்ளே படுத்து கிடக்கின்றது.  குப்பையும் கூளமும். துர்நாற்றம் சகிகிக்காது. வங்கியில் சென்று இதற்கு யார் பொறுப்பு என்று கண்டுபிடிக்கவே மூன்று நாள் ஆனது.  விடாது கண்டுபிடித்து அவரிடம் கேட்க தனியார் நிர்வாகம் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  சொல்லியிருக்கின்றோம்.  இனிமேல் வருவார்கள் என்றார்.

அரசு சார்ந்த வங்கியின் நிலமை இது.

தனியார் வங்கிகளில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.  பெரும்பாலும் தலையை சொறித்து டீ குடிக்க ஏதாவது கொடுங்க தம்பி என்கிறார்கள்.

ஆனால் தனியார் வங்கியில் கால் அலர்ட் என்கிற ரீதியில் குறுஞ்செய்தி வருவதற்கும் காசு பிடிக்கின்றார்கள்.

கொள்ளைக்கூட்டத்தில் நீங்கள் சொன்ன கொள்ளையடித்தவன் , கொலை செய்பவன் நல்லவனா? கெட்டவனா?

என்று கேட்பதற்கும் பதிலளியுங்களேன்!

No comments:

Post a Comment