ஏப்ரல் 1, 2015 முதல் சிகரேட் பாக்கெட்டுகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை படங்களாகவும் எழுத்து மூலமாகவும் பிரசுரித்து விற்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மார்ச் 31-ஆம் நாள் பிஜேபியின் மக்களவை உறுப்பினர் "புகை பிடிப்பதால் கேன்சர் ஏற்படுகிறது என்று இந்தியாவில் எந்தவிதமான ஆராய்ச்சிகளும் செய்து நிரூபிக்கப்படாத நிலையில், சிகரேட் பாக்கெட்டுகளில் பிரசுரிக்கப்படும் படங்கள் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்.
பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து மற்றொரு எம் பி "சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமான சர்க்கரையை தடை செய்ய கோருவார்களா?" என்று மிகவும் அறிவுப்பூர்வமான வாதத்தை வைத்து சிகரேட் பாக்கெட்டில் படங்களை பிரசுரிக்க தேவையில்லை என்று மறைமுகமாக தெளிவுபடுத்துகிறார்.
இன்று மற்றுமொரு பிஜேபி எம்பி தனக்குத்தெரிந்த ஒருவர் தினமும் ஒரு பாட்டில் மதுவும் 60 சிகரேட்டும் ஊதித்தள்ளுகிறார். அவருக்கு கேன்சரோ அல்லது வேறு கோளாறோ ஏற்படவில்லை. எனவே புகைபிடித்தால் கான்சர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று லூஸுத்தனமாக யாரும் பேசவேண்டாம் என்று சொல்லவருகிறார்.
வரும் நாட்களில் இன்னும் யார்யார் என்னென்ன வியாக்கியானம் சொல்ல இருக்கின்றார்களோ தெரியவில்லை. இந்தியர்களாகிய நாம் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் நோக்கம் இப்படி பெரும் முதலாளிகளுக்கு தொண்டு செய்து தங்களை வளர்த்துக்கொள்ளவா?
எனக்குத்தெரிந்து ஒருவர் விஷம் சாப்பிட்டும் சாகாமல் உயிரோடிருக்கிறார். எனவே விஷம் அறிந்தினால் யாரும் சாகமாட்டார்கள் என்று சொல்லிவிடலாமா?
அதேபோல் மாட்டுக்கறி சாப்பிடும் யாரும் இறந்துவிடவில்லை. பின்னர் ஏன் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவற்றை அறுத்து விற்க தடை செய்து உள்ளார்கள்?
நாள் தவறாமல் சாராயம் குடித்து உயிரோடிருந்து, தன் குடும்பத்தினரை தினம் தினம் கொன்றுக்கொண்டிருக்கும்போது, ஏன் மதுவிலக்கை குஜராத்தில் அமுல்படுத்தியுள்ளார்கள்?
இப்படியெல்லாம் கேணத்தனமாக பேசியதாலேயே மத்தியில் ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் டில்லி மற்றும் கஷ்மீர் மக்கள் இவர்களை கை விட்டுவிட்டனர். மேலும் இப்படியே உளறிக்கொண்டிருந்தால் வரும் ஆண்டு நடக்கவிருக்கும் மாநில தேர்தல் அனைத்திலும் சங்குதான் போல!
" பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் "
ReplyDeleteஎன்ற நிலைதான் இந்திய அரசியல்வாதிகளின் கொள்கை ! அந்நிய முதலீட்டாளர்களுக்கு எப்பாடுபட்டாவது சிவப்பு கம்பளம் விரிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?!
நன்றி
சாமானியன்