கடந்த சில நாட்களாக தமிழ் வலைத்தளங்களில் எங்கெல்லாம் திரு நரேந்திர மோடி அவர்களை பற்றி "உண்மையான" விஷயங்கள் வெளிவருகின்றனவோ அங்கெல்லாம் ஒரு போலி பெயருடன் வந்து பின்னூட்டம் எனும் பெயரில் விஷத்தை கக்கிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் மோடிஜியின் ஆதரவாளர்கள். இதில் முக்கிய பங்களிப்பை கொடுப்பது taruada/taru என்கின்ற fake id. இது தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இண்டெர்நெட்டை மிகவும் துல்லியமாக பயன்படுத்தி படித்தவர்களின் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தி தாங்களே எதிர்ப்பார்க்காத ஒரு அசுர வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது பாஜக. இப்போது ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் ஆன பிறகு "பல் இளிக்குமாம் பித்தளை" என்பதை போன்று, நடப்பது ஒரு காங்கிரஸ் பினாமி ஆட்சி என்பதை நிரூபித்துக்கொண்டுள்ளனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகிவிடும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணம் இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவரப்பட்டு, இந்தியர் அனைவருக்கும் பல லட்சங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றெல்லாம கூறிவிட்டு, இப்போது மானியத்தை விட்டு கொடுங்கள், பௌர்ணமியன்று விளக்குகளை அணைத்துவிடுங்கள், நாங்கள் விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு நில அபகரிப்பு மசோதாவை அவசரச்சட்டமாக பிறப்பிப்பது, பதவியேற்ற பத்து மாதங்களில் மோடி மற்றும் மந்திரிகளின் பயணச்செலவு மட்டும் 300 கோடிகளுக்கும் மேல், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இவர்களின் சாதனைகளை. அது போக இப்போது தாஜ்மகாலை இடிக்க வேண்டுமாம். அங்கே சிவன் கோயிலை கட்டப்போறாங்களாம். டேய்... அது மயானம்டா... ரெண்டு பேர புதைத்த இடம்டா...
பழைய ஹோட்டல்களில் "இது இந்த ஹோட்டலில் திருடியது" என்று தங்களின் பாத்திரங்களில் பொறித்து வைத்திருந்தார்கள். அதுபோல இப்போது மோடி அவர்கள் தான் அணியும் கோட்டில் தன்னுடைய பெயரை போறித்துக்கொண்டு அணிந்துகொள்கிறார். நேற்று ஃப்ரான்ஸுக்கு சென்றபோதும் தன்னுடைய ஷாலில் தன் பெயரை NM என்று பொறித்துள்ளார்.
டோல் ஃப்ரீ நம்பருக்கே மிஸ்டு கால் கொடுக்க கற்றுத்தந்த இவர்களால்தான் நாம வல்லரசாகப்போறோமா?
எனவே வலைத்தள நண்பர்களே, தரு அல்லது தருட அல்லது தருதலை என எந்த பெயரிலும் வரும் பின்னூட்டங்களை நாம் புறக்கணிப்போம். இது அவர்களாகவே தங்களின் மீது வீசிக்கொள்ளும் சேறு என்பதை நாம் புரிந்துக்கொள்வோம்.
இதை அந்த ' தறுதலை 'இனியாவது புரிந்து கொள்ளுமா :)
ReplyDeleteவரலாற்றை கவணித்து படித்தால், இந்திய அரசியலில் எந்த " மோடி வித்தையும் " எடுபடாது என்பது புரிந்துவிடும் !
ReplyDeleteநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
வணக்கம்
ReplyDeleteதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html
நன்றி
சாமானியன்
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி