ஏதோ கனவு போன்றே இருக்கிறது.
இதோ இருபத்து நான்கு ஆண்டுகள் முடிந்து வெள்ளிவிழா ஆண்டில் காலெடுத்து வைத்தாகிவிட்டது!
இந்த ஆண்டுகளில் நாங்கள் சண்டைப்போட்டுள்ளோம்!
விவாதித்துள்ளோம்! அழுதுள்ளோம்! நாங்கள் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேருபாடுகளும் ஏற்பட்டுள்ளன.
இவையனைத்தும் பொதுவானவை. இவை அனைவரின் வாழ்விலும் நடந்து கடந்து சென்றிருக்கும். ஏனெனில் உறவு என்பதில் மகிழ்ச்சி, சோகம், சண்டை, சமாதானம், விவாதம் மற்றும் ஒப்பந்தம் நடந்து கொண்டே இருக்கிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் மனஸ்தாபத்தை எங்களின் இதயத்துக்கு கொண்டுசெல்வதில்லை அதேபோல சண்டை சச்சரவுகளை எங்களின் படுக்கையறைக்கும் கொண்டுசெல்வதில்லை என்பதில் முதல் நாளிலிருந்தே கவனமாக முடிவெடுத்திருந்தோம்.
இந்த முடிவுதான் எங்களின் உறவை சிறப்பாகவும் அசாதாரணமாகவும் மாற்றியது.
எங்கள் உறவின் சாராம்சம் என்பது அன்பு மட்டுமே!
மேலும் இந்த அன்புமட்டுமே எங்களை இணைத்துள்ளது, இன்றுவரை.
வரும் காலங்களிலும் இதுவே எங்களை வழிநடத்தும்.
எங்களின் உறவு என்பது உண்மையானதும் நேர்மையானதும் ஆழமானதும் களங்கமற்றதும் என்று உணர்ந்தேயிருக்கிறோம்!
நாங்கள் இருவரும் ஆழமாகவும் வெறித்தனமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் நேசிக்கின்றோம்... நேசிப்போம்.
என்றேன்றும் நாங்கள் சிறந்த ஜோடியாக இருப்போம் என்பதை என்னுடைய இந்த முதல் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன்.

அன்பின் அஜீஸ் - இனிய வெள்ளிவிழா திருமண நாள் நல்வாழ்த்துகள் - இருவரும் இன்று போல் இணைந்து மகிழ்வுடன் நீடுழி வாழ பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete