அப்போது எனக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயது!?
படிக்கும்போது நண்பர்கள் "மச்சீ, அவ உன்னையே பார்க்கிறாடா" என்று கோர்த்துவிட, நாமும் அதையே நம்பி "மாப்ளே நானும் ஹீரோதான்... ஹீரோதான்.... பார்த்துக்கோ..." அப்படீன்னு வடிவேலு ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுன காலகட்டத்தில், இன்று உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் இருந்தேன்! அதுவும் உன்னுடைய வீட்டில் நடக்கும் விழாவில்! உன்னிடம் முதல்முறையாக பேசிவிடுவது என்று பலவாறாக ஒத்திகையும் பார்த்து முடித்தாகிவிட்டது.
விழா சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது. நானும் உன்னை எப்படியாவது பார்த்துவிடுவது என்று பலவகையில் முயன்றுகொண்டிருந்தேன். நீயோ உன்னுடைய அறையிலிருந்து வெளியே வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எப்படியாவது உன்னை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால், அங்கு நான் கண்டது 6 அடி 8 அங்குல அஜானுபாகுவான உன்னுடைய உடன்பிறப்பு. வேறு வழியில்லை. வாலை சுருட்டிக்கொண்டேன். விழா இனிதே முடிந்தது. அனைவரும் தத்தம் வீடுகளுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். பேசவேண்டும் என்று போட்ட ஒத்திகைகள் கண் முன்னே வந்துகொண்டிருக்க, "அடச்சே! ஒரே ஒரு பார்வை கூட பார்க்க முடியவில்லையே" என்று நொந்தவனாக வீட்டை அடைந்தேன்.
வீட்டிற்கு வந்தால் என் அண்ணன் விழா மிகச்சிறப்பாக நடந்ததல்லவா என்று கூறி என்னுடைய எரிச்சலில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூறியதில் ஒரு வார்த்தை என்னுடைய மனத்தில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா?" என்று பல்பு எரியவிட்டது! ஆம். அண்ணன் "வீடியோ காசெட் இன்னும் இரண்டு தினங்களில் எடிட் செய்யப்பட்டு நமக்கு கிடைத்துவிடும்" என்றார். ஆஹா அண்ணனின் வாக்கு அருள் வாக்காகப்பட்டது.
இரண்டு தினங்கள் என்பது மிகவும் மெதுவாகச் சென்றது. நானே அண்ணனிடம் பேசி வீடியோ எடுத்தவரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரை நச்சரித்து சீக்கிரம் கேசட் கொடுக்க வற்புருத்தி பெற்றுக்கொண்டேன். இப்போது வீட்டில் கேசட் போட்டு பார்க்கலாம் என்றால் அனைவரும் வந்து டிவி பெட்டிக்குமுன் அமர்ந்துவிட்டனர். நமக்கோ வெட்கம் கலந்த பயம். எங்கே நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமோ என்று. பயந்ததுபோலவே என் அக்கா கேட்டுவிட்டார் "என்னடா அந்த ரூமையே திருட்டு முழியோட பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று. "வீடியோகிராஃபரை கொல்லவேண்டும். நாய் நம்மையே வளைத்து வளைத்து படம் எடுத்திருக்கான்" என்று மனதில் கருவிக்கொண்டே நீ எந்த ஷாட்டில் வருகிறாய் என்று காத்துக்கொண்டிருந்தேன்.
அதோ என் தேவதை! நீல நிறத்தில் பட்டுடுத்தி, அதில் வெள்ளியிலாலான சிறு பூக்களோடு! உன்னை எப்படி வர்ணிப்பது எதை வர்ணிப்பது?
உன்னுடைய கருங்கூந்தலையா அல்லது உன்னுடைய கருவிழிகளையா அல்லது ரோஜாப்பூ நிற கன்னங்களையா அல்லது அந்த ஆரஞ்சு அதரங்களையா அல்லது சங்குக் கழுத்தையா அல்லது உன்னுடைய இல்லாத இடையையா?
என் வானில் பூந்தோட்டம்
என் வாழ்வின் தேரோட்டம்
என் வாழ்க்கைக்குத்தந்தாய் உயிரோட்டம்
அன்றுமுதல் எனக்கு பிடித்த நிறம் நீலமானது.
அந்த 1 நிமிடம் 26 நொடி வீடியோ என்னை கிருக்கனாக்கியது. அந்த வீடியோ காசெட்டுக்கு வாயிருந்தால் அது என்னை திட்டித்தீர்த்திருக்கும். நேரம் கிடைத்தபோதெல்லாம், தனிமையில், திருப்பித் திருப்பி அந்த 89 நொடி (கிட்டத்தட்ட) வீடியோவை, படம் தேயும் வரை பார்த்தேன்.
இந்த இனிய எண்ணங்களை உன்னிடம் சொல்லவேண்டும். உன்னை என்னவளாக்கிக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு முறை கண்களை மூடி உன்னைப்பார்த்து பேசவேண்டியதை ஒத்திகை பார்த்தேன்.
"என்னங்க... என்னங்க... பஸ்ஸுலே உட்காந்தா எப்படிதான் தூக்கம் வருதோ உங்களுக்கு. எந்ந்ந்த்த்திரிங்ங்க்ங்க்க! சைதாப்பேட்டை வந்திடுச்சு எந்திருங்க!" என்ற என் நீலக்குயிலின் குரலைக்கேட்டு கண்விழித்தேன். நான் அவரை நோக்க அவர் என்னை நோக்க... "என்ன மீண்டும் கனவா?" என்றார்.
அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அதுவொரு அழகிய நிலாக்காலம் என்று மனம் உள்ளுக்குள் பாடிக்கொண்டது!
கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று கண்சிமிட்டியபடியே என்னவள் பஸ்ஸிலிருந்து இறங்க நானும் அவரை பின்தொடர்ந்தேன்.
கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று கண்சிமிட்டியபடியே என்னவள் பஸ்ஸிலிருந்து இறங்க நானும் அவரை பின்தொடர்ந்தேன்.
நல்ல வர்ணனை + நல்ல பாடல்களோடு காதல் கடிதம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeletehttp://www.seenuguru.com/2013/06/blog-post_13.html-->சீனு தளம் மூலம் தான் உங்களின் தளம் தெரியும்... அவருக்கும் நன்றி...
கண்ணுலேர்ந்து அப்படியே தண்ணி வந்துடுச்சுபா! இந்த சைதாப்பேட்டை கொக்கு-க்கு ஃபஸ்ட் தபா ஒரு கமெண்ட்,...அதுவும் உங்ககிட்டேயிருந்து. ரொம்ப டாங்ஸ்பா! அப்டியே ஒரு பெஷல் டாங்ஸ் நம்ம சீனுவுக்கும்பா. அப்பாலிக்கா, சும்மா கமெண்ட் மட்டும் போட்டுக்கினு இர்ந்த நமக்கு பதிவு எயுத ஆசை வன்துச்சா! ஆனா தெர்ஞ்சிக்க வேண்டியது ஜாஸ்திகீது. அப்பாலிக்கா மீண்டும் தாங்ஸ்பா
Deleteஉயிர்ப்போடு உண்மையோடு ஓர் கடிதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப டாங்ஸ் வாத்யாரே!
Deleteஎதார்த்தமான உள்வரிகள்..
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் செயல்தானே!!!
வாழ்த்துகள்!!!
தொழிற்களம் வாசியுங்கள்
கரீட்டா சொன்னபா. டாங்ஸ் வாத்யாரே!
Delete// உன்னை எப்படி வர்ணிப்பது எதை வர்ணிப்பது?// நல்ல வரிகள்
ReplyDeleteமிக எதார்த்தமான வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட கடிதம்.. போட்டியில் பங்கு பெற்றமைக்கும் வெல்வதற்கும் வாழ்த்துக்கள் சார்...
உங்கள் வலையில் பரிசுப் போட்டிக்கான விளம்பரம் இணைத்தமைக்கு மிக்க நன்றி சார்
followers widjet இணைத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் பதிவுகள் பலரை எளிதில் சென்று சேர வசதியாய் இருக்கும்.
settings-> posts and commands-> word verification இதை நீக்கி விடுங்கள்... பின்னூட்டம் இட வசதியாய் இருக்கும்
இன்னா கண்ணு, நீ போய் நம்க்கிட்டே டாங்ஸ் சொல்றே! போட்டி வெச்சி நம்மல எயுத வெச்சதுக்கு நான்தாம்பா ரொம்ப ரொம்ப டாங்ஸ் சொல்லனும். அப்பாலே, நீ ஸொன்னா மாரி word verification NO செஞ்சுட்டேன் நைனா! அந்த followers widjet-தான் புர்லே கண்ணு! மற்வக்க டாங்ஸ்பா
Deleteவித்தியாசமான முயற்சி. ஏக்கவும் தவிப்பும் அழகாக வெளிப்பட்டிருக்கின்றன.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ரொம்ப ரொம்ப டாங்ஸ்பா
Deleteகாட்சிகளை படம் பிடித்து காட்டிய வரிகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்ம படத்தையும் பார்த்ததுக்கு ஒரு பெஷல் டாங்ஸ்ஸுங்கோ!
Deleteகடிதம் என்றால் இது தான் அழகாவும் வெகு சிறப்பாகவும் எழுதியுள்ளீர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் நீலக் குயிலை சந்தீர்களா? இல்லை அதும் கணவகிப்போனது ...
இதுவே பர்ஸு கெட்ச்சாமாரி ஹாப்பியா கீது கண்ணு!
Deleteஅப்பாலிக்கா, நீ இன்னா குடும்பத்லே கொயப்பம் உண்டாக்க பாக்றே! நல்லால்லே. சொல்லிட்டேன்,...அக்க்காங்!
அழகான வருணனையோடு அற்புதமான ஓர் காதல் கடிதம். வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் !!!
ReplyDeleteரொம்ப டாங்ஸ்பா
DeleteMega azhagana varunanaigal. Ungal neela kuil kedaithazha. Kedaipadurku ennudaiya vazhthukal
ReplyDeleteஇது யாரு, டையுக்கும் கவனுக்கும் கூவத்லே பொறந்ததா?
Deleteஇந்தா மிஸ்ஸியம்மா. குடும்பத்த கலைக்குறதுலே உனக்கு அவ்ளோ ஹாப்பியா?
வாய்த்து சொன்ன வாய்க்கு ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸுங்கோ!
ReplyDeleteரொம்ப எளிமையா எதார்த்தமா இருக்கு சார் உங்கள் கடிதம்.... வாழ்த்துக்கள்.
டாங்ஸ்பா
Deleteநீலக்குயிலை வீடியோவில் பார்த்ததும் மனதில் எழுந்த வரிகள் நன்றாக இருக்கின்றன. காதலே கனவுதானா! ம்...ஹூம்!!!! (பெருமூச்சு)
ReplyDelete(அதுசரி,,, 'நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடவா' என்ற எஸ் பி பியின் குரலில் ஒரு பாடலைக் கேட்டிருக்கிறீர்களோ!) :))
நீலக்குயில் என்று தொடங்கும் அல்லா பாடலும் அத்துபடி வாத்யாரே! நீ சொல்லிகிற பாட்டு மகுடி படத்லே நம்ம மைக் மோகன் மைக்கில்லமலே மகுடி வாசிப்பதுதானே, நள்னிய பாத்து!
Deleteரொம்ப டாங்ஸ்பா! இன்னிக்கு அல்லாமே டூப்பா போயிடுச்சுபா!
// மைக் மோகன் மைக்கில்லமலே மகுடி வாசிப்பதுதானே //
Deleteஹா ஹா செம நக்கலு நைனா உனக்கு ...!
ReplyDeleteநண்பர் அஜீஸ்,
வாழ்த்துக்கள்.
நீங்கள் வலைத்தளம் துவக்கி இருப்பது
எனக்கு இப்போது தான் தெரிய வந்தது.
அமர்க்களமாக எழுதுகிறீர்கள்.
இனிதே தொடர வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன்
காவிரி மைந்தன் ஐயா!
ReplyDeleteஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்துவிட்டேனையா!
உங்களின் வாழ்த்தும் அங்கிகாரமும் எனக்கு கிடைத்த கௌரவம் ஐயா! நன்றிகள் பலப்பல!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்லா கீது பா.. போட்டில கெலிக்க என் விஷஸ் பா..!
ReplyDeleteதோ...ப்பார்றா...
ReplyDeleteநம்ம தோஸ்த!
ரொம்ப டாங்க்ஸ்பா!
நல்லாருக்குண்ணே...
ReplyDeleteடாங்க்ஸுங்க்ண்ணா!
Deleteஅன்பின் அஜீஸ் - போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நீலக் குயில் என்றென்றும் நினைவில் இருக்கட்டும் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி சீனா ஐயா!
Deleteஉங்களின் கட்டளையே நிறைவேற்றுவேன் ஐயா
thala...super....vazhththukkal....
ReplyDeleteஉன்கிட்டே நான் ஜாஸ்தி எதிர்பாத்தேம்பா!
Deleteநீயும் அல்லார்மாறி "ஸூப்பர் தல"ன்னு பொத்தாம் பொதுவா கூவுறியே வாத்யாரே, நல்லாவா இர்க்கூ?
இன்னா நைனா இது... லவ்வுக்கு ஒரு லெட்டரை எழுதி ஃபீலிங்ஸப் புழிய்யான்னா... அத்தோட சேத்து ஒரு சிறுகதையும் தந்து கீறியே... இன்னாபா ஞாயம் இது?: ஆனா லவ் லெட்டரு படா ஷோக்காதான் எழுதிக்கீறப்பா! இம்மா நாளா நம்ம பக்கத்து பேட்டைல கீற உன்னக் கண்டுக்காமப் பூட்டனேப்பா!
ReplyDeleteநம்ம பேட்டைலே ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ...ஃப்ரீ!
Deleteவாய்த்து சொன்ன உனக்கு என் டாங்க்ஸ்ண்ணா!
நீயெல்லாம் இப்ப நம்மள கண்டுக்கினதே பெரிய விசயமண்ணா. அதுவே எனக்கு பெரிய "கப்" வாங்கின மாரி ஹாப்பியா கீதுண்ணா.
அய்யோடா ...! அப்போ வீடியோவுல பாத்த நீலக்குயிலும் , பஸ்சுல படுத்துன நீலக்குயிலும் வேற வேறயா ...?
ReplyDeleteபடா ஷோக்கா கீதுனா ....!
அன்புள்ள அஜீஸ்,
ReplyDeleteகாதல் கடிதத்தில் ஒரு சோகத்தையும் சேர்த்துச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கலந்து எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.
சூப்பரா எழுதியிருக்கீங்க தோழரே நான் இந்தப் போட்டியில் ஜெயிக்க வாய்ப்பே இல்லைன்னு தெளிவாகிடுச்சு அருமை அருமை
ReplyDelete