நானும் கடந்த 30 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன் இந்த சென்னையை develop செய்துக்கொண்டுதானிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒரு project ஆரம்பித்து அது முடியும்வரை ஒரே "ரப்சர்"தாங்க! அந்த project முடியும் போது எந்த காரணத்துக்காக ஆரம்பித்தார்களோ அந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்காது அல்லது அதைவிட பிரச்சனை பல மடங்கு பெரியதாகியிருக்கும். உதாரணத்துக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் அல்லது ரயில்வே மேம்பாலம் அல்லது அடுக்குமாடி சாலைகள்.
சென்னையின் முதல் ரயில்வே மேம்பாலம் கோடம்பாக்கத்தில் கட்டப்பட்டது. வருடம் 1963-65. அப்போதே ஒவ்வொரு மருங்கிலும் இரண்டிரண்டு வாகனம் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டது. அதேபோல சென்னை பீச் ஸ்டேஷன் அருகில் ரிசர்வ் பேங்க் எதிரில் அமைந்துள்ள under ground bridge. இது 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் நீளம் 450 மீட்டராகவும் அகலம் 15 மீட்டராகவும் உள்ளது. மற்றொரு பாலம் என்றால் அது சைதாப்பேட்டையில் இருக்கும் மறைமலை அடிகளார் பாலம். இப்பாலம் ஒரு காலத்தில் ஆசியாவின் மிக அகலமான ஆற்றுப் பாலம் எனும் பெருமையை கொண்டிருந்தது. அதே போல St ஜார்ஜ் கோட்டையையும் மெரினா கடற்கரையையும் இணைக்கும் நேப்பியர் பாலம். இவையனைத்தும் தங்களின் சேவையை இன்றுவரைக்கும் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. இதற்கு மிகமுக்கிய காரணம் அன்று ஆரம்பிக்கும்போதே இவற்றின் குறிக்கோள் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டது.
ஆனால் இன்று செய்யப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கான காரணம் சேவை என்பது இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்களை கடத்த ஒரு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. செயலாக்கத்திட்டம் என்பதே அடுத்து வரும் அரசுக்கு கொடச்சல் தரும் திட்டமாகவே ஆகிவிட்டது. இதில் அதிகம் அவஸ்தைப்படுவது சென்னைவாழ் மக்கள்தான்.
இதோ சீனாவின் அடுத்த வளர்ச்சித் திட்டம்!
நான் ரசித்த ஒரு விளம்பரம் உங்களின் பார்வைக்காக. நம் வளர்ச்சியை பாருங்க, விதவையின் நெற்றித்திலகம் அழியாமல் இருக்க ஒரு அரிய கண்டுபிடிப்பு!
தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்.
No comments:
Post a Comment