Tuesday, 18 June 2013

ஓவர் டைம்

அலுவலகத்திலிருந்து சரியான நேரத்தில் கிளம்புங்கள், எப்பொழுதும்!


வேலை என்பது என்றுமே முடிவுறாத ஒரு விஷயமாகும்.
உங்களுக்கு வாடிக்கையாளர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானவர்கள் உங்களின் குடும்பமும் நட்பும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் வாழ்க்கையில் தடுமாறினால் உங்கள் முதலாளியோ வாடிக்கையாளரோ உதவ வரமாட்டார்கள்.  மாறாக, அப்போது ஓடோடி வந்து உதவுபவர்கள் நமது குடுபத்தினரும் நண்பர்களுமே.


வாழ்க்கை என்பது வேலை, அலுவலகம், முதலாளி, வாடிக்கையாளர் என்பது மட்டுமே அல்ல.  அதையும் தாண்டி.... 
வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடாதீர்கள்.

ஒருவர் அலுவலகத்தில் அதிக நேரம் உழைக்கின்றாரென்றால் அவர் கடின உழைப்பாளி என்றாகிவிடாது.  மாறாக, தன்னுடைய வேலையை குறிப்பிட்ட காலநேரத்திற்குள் முடிக்க முடியாத, நேரத்தை நிர்வகிக்கத் தெரியாத முட்டாளாகவே கருதப்படுவார்.


இவருக்கு தன் சொந்த வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் எந்தவித பொருப்பும் கிடைத்துவிடாது.  இவர் திறமையோ யோக்கியதையோ அற்றவராகவே கருதப்படுவர்.


நீங்கள் கடுமையாக படித்து முன்னேறியது ஒரு எந்திரத்தைப் போல வாழ்க்கைப்படவல்ல.
உங்களின் முதலாளி உங்களை அதிக நேரம் உழைக்கச் சொல்கிறாரென்றால் அவரும் திறமையற்றவரே!  அவரின் வாழ்க்கையும் அர்த்தமற்றதானதே எனபதை அவருக்கு புரிய வையுங்கள்.  அல்லது அவரையும் இதை படிக்கச் சொல்லுங்கள்.

கடைசியாக ஒரு விஷயம்:
சிறந்த உழைப்பாளிக்கு கிடைக்கும் பரிசு...
அதிக வேலை!!!

படங்களை சுட்டுக்கொள்ள உதவிய கூகுல் 'தல'க்கு நன்றி

2 comments:

  1. /// அலுவலகத்தில் அதிக நேரம் உழைக்கின்றாரென்றால் அவர் கடின உழைப்பாளி என்றாகிவிடாது.... ///

    நல்லாவே சொன்னீங்க...!

    ReplyDelete
  2. போஸ்ட் போட்ட பத்தாவது நிமிஷத்துக்குள்ள comment போட்டு ஊக்கப்படுத்தும் உங்களுக்கு நன்றிகள் பற்பல!

    ReplyDelete