Wednesday, 18 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா? பகுதி1

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்னை அமேரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட போது அங்கேயே SFJ போட்ட வழக்கில் சம்மன் கொடுக்கப்பட்டது.  அப்போதே தில்லாலங்கடி செய்து எஸ்ஸாகி வந்துவிட்டார். இப்போது மூன்று நாட்களுக்கு முன், அதாவது 16 டிஸம்பரில் மீண்டும் அந்த கேஸில் உடனடியாக ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமேரிக்க கோர்ட் மீண்டும் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக களத்தில் குதித்த இந்திய அரசு, தேவ்யானி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்திவருகிறது.  கடந்த பல நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதிகளிலிருந்து பல முக்கிய பிரமுகர்களையும் அமேரிக்கா அவமானப்படுத்தியபோது ஏற்படாத வன்மம்/கோபம் இந்திய அரசுக்கும் நமது மீடியாவுக்கும் இப்போது மட்டும் ஏன்?  (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

கடந்த வார இறுதியில் ஒரு கார் விபத்து ஏற்பட்டது.  இதில் இருவர் கொல்லப்பட்டனர்.  இது எந்த இந்திய செய்தித்தாள்களிலும் வரவில்லை. ஏனெனில் விபத்து ஏற்படுத்திய கார் இந்தியாவின் மிகப்பெரிய புள்ளிக்கு சொந்தமானது என்பதால்.  ரிலையன்ஸ் போர்ட் & டெர்மினல்ஸ் லிட். எனும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனத்தை அன்று ஓட்டியது அந்நிறுவனத்தின் ஒரு தொழிலாளி தான்தான் என்று ஒரு ஆடு போலீஸில் சரணடைந்துள்ளது.   (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

ஆம் ஆத்மி பார்ட்டி என்பதன் உண்மையான அர்த்தம் ஆமாஞ்சாமி கட்சியா இல்லை "மாங்கா" மக்கா கட்சியா (आम = ஆம் = மாங்காய்) அல்லது பொது மக்கள் கட்சியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.  அதுவரை மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொண்டிருக்கவும்.

3 comments:

  1. படித்து ஆட்சிக்கு வருபவர்கள் குறித்து எனக்கு ஒரு துளி கூட நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இவர் மேலே கொஞ்சம் மரியாதை உள்ளது. நம்பிக்கை மாறாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. நல்ல கேள்விகள்!

    ReplyDelete
  3. இது பகுதி 1-ஆ?
    பகுதி 2 வரும்வரை தலைப்பையே வாசித்துக் கொண்டிருக்க வேண்டுமா?
    [அடுத்த பகுதி எப்போ?]

    ReplyDelete