தேவ்யானிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அப்படியென்றால் அவர் வீட்டுக்கு வீட்டு வேலைக்காக வந்து ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு போராட செவ்வாய் கிரகத்திலிருந்து தான் யாரையாவது அழைத்துவர வேண்டும்போல!
தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துக்கொள்ளுங்கள்.
கட்சி பணியாற்ற பல அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். திருமதி ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பிள்ளையார் சுழி போட்டுள்ளார். அப்போ இத்தனை நாட்களாக யாரும் கட்சிக்காக வேலை செய்யவில்லையா? அப்போ ராகுல் காந்தி இத்தனை நாட்களாக செய்துகொண்டிருந்தது எல்லாம் சும்மா டூப்பா?
எங்கேயோ கேட்கும் குரல்...
கட்டக்கடசியாக லோக்பால் சட்டம் நிறைவேறிவிட்டது. ஆனால் உங்கள் புகார் உண்மை என்று நீங்கள் நிரூபிக்கவில்லையென்றால் உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும். புகார் செய்ய நீங்க தயாரா?
அவங்கயெல்லாம் என்ன நம்மை போன்று மாங்காயா அல்லது பழமா?
No comments:
Post a Comment