'கிராமம் தோறும் காங்கிரஸ் வீடு தோறும் கை'
அடுத்து கையில் திருவோடுதாண்டீ!
'டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதால் இன்று சட்டப் பேரவை செல்லவில்லை'
இப்ப அவர் அரசு அதிகாரி இல்லையென்று யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்க! அதான்யா அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் உள்ள வித்தியாசம்!
'நிதி நிலைமை நிலையான தன்மை பெற மத்தியில் நிலையான அரசு அமைவது முக்கியம்'
அப்போ கடந்த பத்தாண்டுகளா நிலையான அரசு அமையவில்லையா அல்லது அரசே அமையவில்லையா? என்ன கொடும சார் இது!
'சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சியை வரும் பொங்கல் அன்று தொடங்கவுள்ளார்'
சைதாப்பேட்டையும் வரும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவதால் எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்பதை "மக்கள் பாதுகாப்பு கழகம்" சார்பாக இப்போதே பதிகிறேன்.
'அரசுத் துறைகளில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களில் 15 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு'
பட்டியலில் இடம்பெறாதவர்களின் வீட்டம்மணிகள் வெகுண்டெழுந்து கணவர்களை "நீ அதற்கும் லாயக்கில்லையா" என்று சொல்லியிருப்பார்களோ?
'போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்'
இதற்கும் அன்னிய முதலீடு தேவைப்படுவதால் சீனா-ஜப்பான் உதவுகிறது போல!
Mmm..
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அஜீஸ்!
ReplyDelete