Monday, 23 December 2013

நாம நல்லா வருவோம்

ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் எம் எல் ஏ பதவி பறிக்கப்படுமா?
டெல்லியில் நாளை ஆட்சியை அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்.  இவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில் தான் பிறந்த இடத்தை மாற்றி குறிப்பிட்டுள்ளார்.  இதை இப்போது மதுரை மாநகராட்சி துறையினர் "கேஜ்ரிவால் மதுரையில் பிறந்தார்" என்ற சான்றிதழ் கொடுத்துள்ளனர்.  எனவே தேர்தல் கமிஷன் அவசரமாக கூடி ஒரு நல்ல முடிவெடுக்கும் என்று நம்புவோமாக.  வாழ்க மதுரை மாநகராட்சியின் சேவைகள்!

வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற செக்ஸ் தொழிலாளிகளுக்கு நிவாரண மையம் அமைக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.  அவர்களை மதிப்பு மரியாதையோடும் வசதியோடும் ஒரு கூறையின் கீழ் வாழவைப்பதே இத்திட்டத்திற்கான காரணம் என்று பெண்கள் மற்றும் சமூக நல மேம்பாட்டு துறையின் செயலாளர் ஷஷி பாஞ்சா PTI-க்கு தெரிவித்தார்.

அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தின் கவர்னராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேபி ஜிண்டால் 2016-ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று செனட்டர் டேவிட் விட்டர் தெரிவித்தார்.  தனது பெயரிலேயே ஜோக்காளி (விட்டர்) என்று உள்ளதால் இப்படி சொல்லியிருப்பாரோ?

ஆம் ஆத்மி கட்சியின் பிகார் கிளை திறப்பு:
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையில் எம் எல் ஏ-க்கள் இல்லாதபோதும் முக்கிய கட்சிகள் ஆட்சி அமைக்க மறுத்ததாலும் வேறு வழியின்று மாட்டிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிகார் கிளை நேற்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.  பீகாரின் பெகுசராய் பகுதியில் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய கூட்டத்தில் அவர் மீது செருப்பு வீசி கட்சி வேலையை ஆரம்பித்துள்ளனர்.  எனினும் செருப்பு வீசியவர் யார் என்பது இன்னும் தெரியாது இருப்பதால் எம் எல் ஏ பதவி யாருக்கு கொடுப்பது என்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


4 comments:

  1. இத்தனை நாள் ஜோக்காளிக்கு 'விட்டர்' பதத்தை நினைத்துப் பார்த்ததில்லை ...தங்களின் மொழிப்பெயர்ப்பில் விழி பிதுங்கிநிற்கிறேன் !'தமிழ் பதிவர் சுடர் 'விருதினை வழங்குவதில் பெருமை அடைகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை கூலிங் கிலாஸ் போட்டுக்கிட்டீங்க!
      இல்லேன்னா பிதுங்கிய விழியை பார்த்து பயந்துவிட்டிருப்பேன்.

      Delete
  2. நாமெல்லாம் கிங்குல்ல என்று நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பை உங்களைப் போன்றவர்கள் எரிச்சல் படுவது சரியா?

    ReplyDelete
    Replies
    1. கிங்குல்லன்னு நிரூபிக்கப்போயி கிருக்குப்பயலேன்னு ஆகிடப்போகுதுன்னு ஒரு எச்சரிக்கைதான், எரிச்சலில்லை. புரிஞ்சுக்கோங்க!

      Delete